இராணுவ பிரசன்னம் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் இன்று காலை 9 மணிக்கு உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், பணியாளர்களின் பங்கேற்புடன் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. வெலிக்கடை சிறையில் 1983 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் அவ்வேளை படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமாக இரண்டு நிபுடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடர் தவிசாளரினால் ஏற்றி வைக்;கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது. அதில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல அவர்களை நினைவு கூர்வதும் இராணுவ மயமாக்கலின் ஊடாக தடை செய்யப்படுகின்றது. இன்றைய தினம் கூட சுகாதார நடைமுறைகளுக்கு முழுமையாக மதிப்பளித்து நினைவேந்தலினை நாம் செய்ய முற்பட்ட போது காலையிலேயே பொலிசார் எமது அலுவலகம் முன்பாக நோட்டமிடுகின்றனர்.
அதுபோன்று இராணுவப் புலனாய்வாளர்கள் அலுவலக வாசலில் காத்து நிற்கின்றனர். இதை அடுத்து பல உறுப்பினர்கள் அச்சத்தின் நிமிர்த்தம் இந் நிகழ்வில் பங்கேற்கவில்லை.
உலகம் அறிந்த கறுப்பு யூலை போன்ற இனவாதத் தாக்குதல்கள் இனியும் தமிழ் மக்கள் மீது முடுக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் எமது நினைவு கூர்தல் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவும் அனுஸ்டிக்கின்றோம். ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் முழுமையான அனுசரனையோடு ஏமுத மக்குள் 2 ஆயிரம் தொடக்கம் 3 ஆயிரம் வரையில் மிகக் கெடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். எமது தலைவர்கள் சிறையில் கண்கள் தோட்டப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் சொத்துக்கள் வாக்காளர் இடாப்பில் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு இழிக்கப்பட்டன. இடிப்படையில் இவைகள் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள். இவை போன்று தமிழர் வரலாற்றில் ஏராளமான கொடுமைகள், மிலேச்சத்தனமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவை எதற்கும் 38 ஆண்டுகள் கடந்தபோதும் எமக்கு நீதி வழங்கப்படவில்லை.
இனி நடைபெறாது என்பதற்கும் உத்தரவாதமில்லை என்ற நிலைமையினையே இனத்திற்கு மறுக்கப்படும் நீதி உணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.