வனிதாவுக்கும் எனக்கும் திருணம் நடப்பது ஆண்டவன் கையில் உள்ளது என்று கூறியுள்ளார் பவர்ஸ்டார்.
மூன்று தினங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார், நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனும் மணமகன், மணமகள் வேடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது. இது சமூக வலைதளங்களில் வைரலானதால் இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை வனிதா விஜயகுமார் மணமகன்,மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்க்காகத்தான் போட்டோ ஷூட், எடுத்த புகைப்படத்தை வெளியிட்டேன். என்னுடைய சொந்த வாழ்க்கையில் நான்கு திருமணம் அல்ல நாற்பது திருமணம் கூட செய்வேன் அது எனது சொந்த விருப்பம் என்று அதிரடியாக கூறினார்.