முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபையினால் பல மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட துணுக்காய் பொதுச்சந்தை ஐயன்கன் குளம் பொதுச் சந்தை மற்றும் துணுக்காய் பேருந்து நிலையம் என்பன எந்தவித பயன்பாடுகளும் இன்றி கால்நடைகளின் உறைவிடமாகவும் கட்டடங்களும் சேதமடைந்து காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட ஐயன்கன் குளம் பகுதியில் சுமார் 23 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில் நெல்சிப் திட்டத்தின் கீழ் சந்தைக் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சந்தை இயங்காத நிலையில் கால்நடைகளின் உறைவிடமாகவும் காணப்படுகின்றது.
இதேபோன்று துணுக்காய் பிரதேசத்தில அமைக்கப்பட்டுள்ள துணுக்காய் பொதுச்சந்தை மற்றும் பேருந்து நிலையம் என்பன ஏழு வருடங்களக்கு மேலாக எந்தவித பயன்பாடுகளுமின்றிக் காணப்படுகின்றது.
குறிப்பாக சுமார் 40 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில் பொதுச் சந்தைக் கட்டிடம் அமைக்கப்பட்டு எந்தவித பயன்பாடுகளுமின்றி காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இது கால்நடைகளின் உறைவிடமாக காணப்பட்ட போதும் 2019ஆம் ஆண்டு இதற்கான சுற்று வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதும் இச்சந்தை பராமரிக்கப்படாத நிலையில் அதன் கூரைகளின் கூரைத்தகடுகள் அகற்றப்பட்டும் களவாடப்படும் ஏனைய பொருட்கள் சேதமடைந்தும் காணப்படுகின்றன.