யாழ் வலயத்தைச் சேர்ந்த சிறுப்பிட்டி பிரதேச ஆரம்ப பாடசாலை அதிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று அவர் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இவர் புதன்கிழமை (14) யாழ் கல்வித்திணைக்களத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் அதில் 50பேர் பங்குபற்றியதாகவும் தெரிய வருகிறது.
இதைவிட குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடாத்தியுள்ளார்.
அத்துடன், உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த அல்லது இவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை.
குறித்த அதிபரின் பாடசாலையில் முதல் வாரத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது. அத்துடன் இம்மாதம் 9ஆம் திகதி குறித்த பாடசாலை அதிபர் முதலாவது கொரோனா தடுப்பூசியும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது