சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி சாதனத்துக்கான செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு- 10 பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைதானவர் போதைக்கு அடிமையானவர் என்றும், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1