இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262ஓட்டங்களை பெற்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
தொடக்க வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ, மினோட் பானுக முதல் விக்கெட்டிற்கு 49 ஓட்டங்களை பகிர்ந்தனர். அவிஷ்க பெர்னாண்டோ 32, மினோட் பானுக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 43, தசுன் சானக 39, சரித்த அசலங்க 38 ஓட்டங்களை பெற்றனர்.
பந்துவீச்சில் தீபக் சாகர், யுவெந்திர சாகல், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1