25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
கிழக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தில் கைதான இருவர் விடுதலை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட காத்தான்குடியைச் இருவருக்கு எதிராக போதிய சாட்சி இல்லாத காரணத்தால் வழக்கு தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவிக்கப்பட்டதையடுத்து இருவரையும் இந்த வழக்கில் இருந்து கடந்த புதன்கிழமை (14) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியை சேர்ந்தவரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய ஒருவரை கடந்த 2019 ஏப்ரல் 28 ஆம் திகதியும், அதே பகுதியயை சேர்ந்த மற்றொருவரை கடந்த 2019 யூன் 20 ஆம் திகதியும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சந்தேகத்தில் கைதுசெய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இருவரையும் கடந்த 2020 ஒகஸ்ட் மாதம் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டு தொடர்ந்தும் வழக்கு விசாரணைகளுக்கு நீதிமன்றில் ஆஜராகி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்களுக்கு எதிராக வழக்கு தொடர போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபரினால் மட்டக்களப்பு நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நகர்வு மனு தாக்குதல் செய்யப்பட்டு வழக்கு எடுக்கப்பட்டது. நீதிவான் ஏ.சி.எம் றிஸ்வான் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இருவருக்கும் எதிராக வழக்கிற்கு போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நியமனம்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்

east tamil

Leave a Comment