தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வீரமக்கள் தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் சமாதி வளாகத்தில் இடம்பெற்ற இந்நினைவு தினத்தில் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கழகத்தின் கொடியை ஏற்றியதுடன் ஈகைச்சுடரேற்றி உமாமகேஸ்வரன் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
இதனையடுத்து முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் கஜதீபன், ஜி. ரி. லிங்கநாதன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.



