26.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இலங்கை

13% இலங்கையர்களிற்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டது!

இலங்கையின் மக்கள் தொகையில் 36 சதவீதம் பேர் இதுவரையில் கோவிட் -19 தடுப்பூசியையேனும் குறைந்தபட்சம் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநர் வைத்தியர் ரஞ்சித் பதுவந்துதாவ, 13 சதவீதமானவர்களிற்கு  COVID-19 க்கு எதிராக இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்பு மக்களில் 70 சதவீதம் பேர் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும், 25 சதவீதம் பேர் கோவிட் -19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்ககளையும் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கம்பஹாவில் வசிப்பவர்களில் 56 சதவீதம் பேர் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர், 21 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்கள், களுத்துறையில் 54 சதவீதம் பேர் குறைந்தது ஒரு கோவிட் -19 தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர். 20 சதவிகிதத்தினர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர் என்றார்.

தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கைக்கு மேலும் ஆறு மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கும் என்று  கூறினார்.

அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் குறைந்தது 40 சதவீத மக்களுக்கு முழுமையான தடுப்பூசியை செலுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நேற்று இலங்கையில் 337,445 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இலங்கையெில் நாளொன்றில் அதிகமானவர்களிற்கு தடுப்பூசி செலுத்திய சந்தர்ப்பம் இதுவாகும்.

நாட்டில் இதுவரை 6,057,767 பேருக்கு COVID-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 4,520,537 நபர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

விரைவில் பொலன்னறுவையில் சுற்றுலா மேம்பாடு

east tamil

77வது சுதந்திர தின விழா ஏற்பாட்டுக் குழுவினர் – பிரதமர் சந்திப்பு

east tamil

பதுளையில் அதிகரித்த நாய்க்கடி விவகாரம்: செல்லப்பிராணிகள் கடிப்பதே அதிகம்!

Pagetamil

வெலிகம துப்பாக்கிச் சூடு: ஐவர் இலக்கு – ஒருவர் உயிரிழப்பு!

east tamil

யாழில் மதுபானச்சாலைக்குள் ரௌடிகள் வெறியாட்டம்!

Pagetamil

Leave a Comment