அம்பாறை மாவட்ட திறன்வான்மையாளர் சங்கத்தினால் கொடையாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட ரூபாய் 35 இலட்சம் பெறுமதியான வெண்டிலேட்டர் உபகரணம் செவ்வாய்க்கிழமை(13) அம்பாறை பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உப்புல் விஜயநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிதிகளாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ச, அம்பாறை மாவட்ட அரச அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். .
இந்த வெண்டிலேட்டர் கொள்வனவிற்காக அன்பளிப்புச் செய்யப்பட்ட தொகையில் அதிகூடிய தொகையை வழங்கியிருந்த சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கம் இதன் போது நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த நினைவுச் சின்னத்தை சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம்.எம்.முபாரக், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்சவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
-பா.டிலான்-