இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருதய வைத்தியர், மிகிந்தலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மற்றும் இரத்தினக்கல் தொழிலதிபர்கள் இருவர் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் சட்டத்தரணிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஆராய்ந்த நீதவான் லோச்சனி அபேவிக்கிர, விசாரணை நடவடிக்கை நிறைவடைந்த பின்னரும் பிரதிவாதிகளை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்திருப்பது நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சந்தேகநபர்களை தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
இன்று நடைபெற்ற அடையாள அணிவகுப்பில், அவர்கள் நான்கு பேரையும் சிறுமி அடையாளம் காட்டினார்.
அவர்களை சிரமம் இன்றி சிறுமி அடையாளம் காண்பித்ததாக நீதிவான் குறிப்பிட்டார்.
மேலும், விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை தவிர்க்குமாறு சந்தேகநபர்களுக்கு நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.