அலைன்ஸ் பினாஸ்ன்ஸ் நிறுவனத்தின் ( Alliance Finance company PLC ) கிளிநொச்சி கிளையினால் 1 லட்சம் பெறுமதியான ஈ.சி.ஜி இயந்திரம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த நிறுவனத்தின் பிராந்திய தலைமை அதிகாரி எஸ்நிசாந்தன், தங்க கடன் மேற்பார்வை மேற்பார்வையாளர் ரி.குமரதாஸ், கிளிநொச்சி கிளை முகாமையாளர் எச்.குணாளன் ஆகியோரால் வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த இயந்திரத்தினை கிளிநொச்சி வைத்திய சாலை வைத்திய அதிகாரி வைத்தியர் சுகந்தனிடம் குறித்த நிறுவனத்தினர் இன்றைய தினம் கையளித்தனர். இதன்போது ஈ.சி.ஜி மருத்துவ பிரிவின் உத்தியோகத்தர் மற்றும் வைத்தியர்களும் பிரசன்னமாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.