கோடீஸ்வர வர்த்தகர்களிற்கு இளம் யுவதிகளை, கன்னிப் பெண்கள் என விற்பனை செய்து வந்த ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். 21 வயதான யுவதியொருவரை விற்பனை செய்ய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
15 வயதான சிறுமியொருவர் பணத்திற்காக விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் ஒருவர், சிறுமியை வாங்கி கோடீஸ்வர தொழிலதிபர் ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமானது.
கைதானவர்களின் கைத்தொலைபேசிகளை ஆராய்ந்ததில், 21 வயதான யுவதியொருவரை விற்பனை செய்யவிருந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. கன்னிப் பெண் என கூறி, 300,000 ரூபாவிற்கு அந்த யுவதியை விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவையில் கட்டான தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர், இளம் கன்னிகளிற்காக பெருமளவு பணத்தை செலவிட்டு வந்துள்ளார்.
கன்னித்தன்மையுடையவர்கள் என பெறப்பட்ட மருத்துவ சான்றிதழுடன் பல சந்தர்ப்பங்களில் அவருக்கு யுவதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.