25.7 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

மேஜர் ஜெனரல் சிசிர பிலப்பிட்டிய முல்லைத்தீவின் புதிய தளபதி!

விஜயபாகு காலாட்படை படையணியின் (வி.ஐ.ஆர்) மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி புதன்கிழமை (23) முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக புதிய தளபதியாக கடமை ஏற்றுக்கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு தளபதியை தலைமையக வளாகத்திற்கு 18 வது விஜயபாகு காலாட்படை படையினர் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர். சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு பதவி ஏற்பு விழாவுடன் தொடர்புடைய வழக்கமான இராணுவ நடைமுறைகள் குறைந்த அளவில் நடத்தப்பட்டன.

பின்னர், மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி தனது புதிய அலுவலகத்தில் அனைத்து மதங்களின் மத அனுசரிப்புகளுக்கு மத்தியில் பதவி ஏற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதை அடையாளப்படுத்தினார். பின்னர் அன்றைய நிகழ்வைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் ஒரு மா மரக்கன்று நடவு செய்ய அழைக்கப்பட்டார்.

பின்னர் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொண்ட அனைத்து நிலையினருக்கும் இடத்தில் உரையாற்றினார், மேலும் முல்லைத்தீவு பகுதியில் விவகாரங்களை சீராக நடத்துவதற்கான தனது எதிர்கால உத்திகளையும் விவரித்தார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி யாழ்ப்பாண குடாநாட்டில் 55 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கமாண்டோ ரெஜிமென்ட்டின் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவுக்குப் பதிலாக இந்நியமனதிற்கு நியமிக்கப்பட்டார்.

முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, படைப்பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் அனைத்து கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

east tamil

வெலே சுதா, மனைவிக்கு 8 வருட சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment