கிராம சேவகர் தாக்கப்பட்டதை கண்டித்து கல்முனையில் போராட்டம்!

Date:

கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட காணி விடயம் ஒன்றினை பார்வையிட சென்ற கிராம சேவையாளரை தாக்கியதை கண்டித்து இன்று (5) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச செயலக முன்றலில் மதியம் ஒன்று கூடிய கிராம சேவகர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்ததுடன் இறுதியாக உதவி பிரதேச செயலாளர் ஜெ.அதிசயராஜிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

இதன் போது கிராம உத்தியோகத்தரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்து எமது பிரிவின் கடமையை எம்மை செய்யவிடு, அரச கடமையினை செய்கின்ற கிராம சேவகரை தாக்கியதை வன்மையாக கண்டிக்கின்றோம், அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு செய்யாதே போன்ற வாசகங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி இருந்ததை காண முடிந்தது.

தாக்கப்பட்டதாக கூறப்படும் கல்முனை 01 சீ கிராம சேகர் சந்திரகுமார் தம்பிராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, நீர் வடிச்சல் உள்ள காணிக்கு பக்கத்தில் உள்ள காணியை உரிமையாளர் தன்னுடைய காணியை நிரப்பும் போது நீர் வடிச்சளையும் நிரம்பியதாகவும் அப்போது வீதியால் சென்ற நான் அதை தட்டிக்கேட்டபோது தன்னை அந்த காணிக்குரியவர் தாக்கியதாகவும் தெரிவித்தார்.

இப்படியானவர்களுக்கு அரசாங்கம் முறைய காணிப்பத்திரம் வழங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தினார். மேலும் இதுதொட்ரபில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலியை ஊடகவியலாளார்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித விடயங்களும் தெரியாது என்றும், தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கல்முனை பொலிஸார் அன்றைய தினமே கைது செய்துள்ளதாகவும், அதன் பின்னர் அந்த நபர் பிணையில் விடுதலையாகியுள்ளதாக தான் அறிவதாகவும் தெரிவித்தார். மேலும் இன்றைய போராட்டம் தொடர்பில் தனக்கு எவ்வித அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை என்றும் சில நேரங்களில் உதவி பிரதேச செயலாளருக்கு அறிவித்திருக்க கூடும் என்றும் தெரிவித்தார்.

தனக்கும் உதவி பிரதேச செயலாளருக்கும் பல வருடங்களாக புரிந்துணர்வு இருந்தும் தன்னுடைய அறிவுறுத்தல்கள் முதல் கல்முனை பிரதேச செயலாளராக தனக்கு முதலில் இருந்த யாருடைய அறிவித்தல்களையும் தற்போதைய உதவி பிரதேச செயலாளர் பின்பற்றுவதில்லை என்றும் இவ்விடயம் தொடர்பில் அம்பாறை அரசாங்க அதிபருக்கு பிரதிகளை அனுப்பியுள்ளதாகவும் இதன்போது ஊடகவியலாளார்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்