25 C
Jaffna
January 19, 2025
Pagetamil
குற்றம்

கள்ளக்காதலால் 8 மாத கர்ப்பம்; கணவனிற்கே தெரியாமல் மறைத்து குழந்தையை புதைத்த கொடூரம்!

கள்ளக்காதலின் மூலம் ஏற்பட்ட கர்ப்பத்தை 8 மாதங்களாக கணவருக்கும் தெரியாமல் மறைத்து, குழந்தையை கொன்ற பெண் பற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் மரக்கலமுல்ல பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு பிள்ளையின் தாயான 28 வயதுடையசேனநாயக்க ரம்யா குமாரி கைது செய்யப்பட்டார். அவரது கணவருக்கு 27 வயது. பையனுக்கு மூன்றரை வயது.

இந்த தம்பதிக்கு 9 வருடங்களின் முன் திருமணம் நடந்தது.

மாரவில பகுதியில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த போது, ஏற்பட்ட காதல், திருமணத்தில் முடிந்தது.

அண்மையில் அந்த பகுதியில் இறந்த நிலையில் சிசுவொன்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நடந்த விசாரணையில் ரம்யா குமாரி கைதானார்.

தனது மனைவி கர்ப்பமாக இருந்ததை அறிந்திருக்கவில்லையென கணவர் தெரிவித்துள்ளார். தான் கரப்பமாக இருப்பதை வீட்டில் யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. காரணம், கள்ளக்காதலினால் அந்த கரப்பம் உருவானது.

இராணுவச்சிப்பாய் ஒருவருடனான உறவு காரணமாக இந்த கர்ப்பம் உருவானது.

8 மாதங்களாக அவரது வயிற்றில் ஏற்பட்ட மாற்றத்தை, வயிற்றில் கட்டி என கணவருக்கு கூறி சமாளித்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி அதிகாலை கழிப்பறைப்கு பின்னாலுள்ள மரத்தடியில் குழந்தை பிரசவித்து, மரத்தின் கீழ் கிடங்கு வெட்டி, சிசுவை புதைத்துள்ளார்.

அயல் வீட்டுக்காரர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து, பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர் சிக்கினார்.

இராணுவச்சிப்பாயுடன் அந்த பெண்ணுக்கு 4 வருடங்களாக கள்ளக்காதல் இருந்துள்ளது. தான் கர்ப்பமானதை இராணுவச்சிப்பாய்க்கு அந்த பெண் தெரிவித்துள்ளார். உடனடியாக கருவை அழிக்கும்படி சில மாத்திரைகளை சிப்பாய் கொடுத்துள்ளார். எனினும், அவற்றை உட்கொள்ள அந்த பெண் தயங்கி வந்துள்ளார். எனினும், கள்ளக்காதலன் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த 25ஆம் திகதி அவர் மாத்திரைகளை உட்கொண்டுள்ளார்.

அதன்பிறகு, 30 ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, அவர் கழிப்பறைக்குச் சென்றுள்ளார். கருச்சிதைவு ஏற்பட்டதையடுத்து, அவற்றை கழிப்பறைக்குப் பின்னால் புதைத்த போது, அயல்வீட்டுக்காரர் அவதானித்துள்ளார்.

குழந்தையின் பிரேத  பரிசோதனையை குலியபிட்டி மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி மேற்கொண்டார், மாத்திரைகள் பாதித்ததால் குழந்தை இறந்த நிலையில் பிரசவமானதா அல்லது இயற்கையான பிரசவமா என்பதில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லையென குறிப்பிடப்படுகிறது.

உடல் ஒரு பிரசவமா அல்லது நேரடி பிறப்புதானா என்பதை தீர்மானிக்க முடியவில்லை.

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தாய் இந்த மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெளிநாடு சென்ற காதலன் தொடர்பு கொள்ளாததால் இளம்பெண் விபரீத முடிவு

Pagetamil

வவுனியா சிறைச்சாலை கூடா நட்பு: கணவனின் நண்பனுடன் பியர் குடித்த பின் நடந்த கொடூரம்!

Pagetamil

யாழ் யுவதியை பேய் கடத்தியதா?: பொலிசார் திண்டாட்டம்!

Pagetamil

போலி விசாவில் ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் நபர் சிக்கினார்!

Pagetamil

வீடு உடைத்து பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கி கொள்ளையடித்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

Leave a Comment