28.4 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

பொலிஸ் பேச்சாளர் உள்ளிட்ட முக்கிய பொலிஸ் அதிகாரிகளிற்கு இடமாற்றம்!

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உள்ளிட்ட 7 மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், ஒரு பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாணத்தின் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நந்தன முனசிங்க, பொலிஸ் நிர்வாக பிரிவிற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குற்றங்கள் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக.இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்ஃ

இதுவரை அந்த பதவியை வகித்து வந்த மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.எஸ்.பத்தினாயக்க, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரிவின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் பி.பி.எஸ்.எம் தர்மரத்னா,  வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் கடமையாற்றுவார்.

டபிள்யூ. கே. ஜெயலத் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆர்.எல். கொடித்துவக்கு சபரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றும் உவா மாகாணத்தின் பதில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றுவார்.

மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.டி.ஆர்.எல். தமிந்த தெற்கு மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஏ.என்.எல். விஜேசேன, அனுராதபுரம் மாவட்டத்தின் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

யாழில் எலிக்காய்ச்சலால் 121 பேர் பாதிப்பு

Pagetamil

Leave a Comment