26.9 C
Jaffna
March 15, 2025
Pagetamil
இலங்கை

தாதியர்களின் 5 கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம்!

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளார்.

எஞ்சிய இரண்டு கோரிக்கைகளுக்கும், அடுத்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்துடன் நேற்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானங்களை மேற்கொண்டார்.

தாதியர் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்
நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2017. 12. 07ஆம் திகதிய 32/2017ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் ஊடாக இடைநிறுத்தப்பட்ட பணிக்குழாம் நிலையை மீண்டும் வழங்குதல்
இடைநிறுத்தப்பட்டுள்ள வகுப்பு iii இலிருந்து வகுப்பு iiக்கு பதவி உயர்வை ஐந்தாண்டுகளிலும் மற்றும் வகுப்பு ii இலிருந்து வகுப்பு iக்கு ஏழு ஆண்டுகளிலும் தரம் உயர்த்துதல்
ரூ .20,000 வருடாந்த சீருடைக் கொடுப்பனவை வழங்குதல்
தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்துக்கு ஐந்து நாட்கள் (30 மணிநேரம்) நேரமாகக் கருதுவதை விசேட குழுவொன்றின் ஆய்வுக்கு உட்படுத்தல்
ஆகிய ஐந்து விடயங்களையும் உடனடியாக நடைமுறைப்படுத்தவதாக ஜனாதிபதி வாக்குறுதி வழங்கினார்.

மேலும் –
10,000 ரூபாய்கள் கொடுப்பனவு,
மற்றும் 2014.12.24 ஆம் திகதியன்று நிதி அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை சம்பளத்தின் 1/100 பங்கு மேலதிக சேவைக் கொடுப்பனவு –
ஆகியவற்றை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வழங்க இணக்கம் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

5 மாகணங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Pagetamil

துணை இராணுவக்குழுவை இயக்கிய தேசபந்து தென்னக்கோன்!

Pagetamil

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!