கிளிநொச்சியில் இன்று மாலை இடமபெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து புனித திரேசா ஆலயம் முன்பாக ஏ 9 வீதியில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நகர் பகுதியை சேர்ந்த சிறிதரன் சந்திரசேனன் (25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கப்ரக வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நடுப்பகுதியில் உள்ள கல்லில் மோதி விபத்துக்குள்ளானது.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
1
+1
1