கொழும்பில் இருந்து மட்டக்களப்பு சென்ற சொகுசு பேருந்துகளில் அனுமதியின்றி பயணித்தவர்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொழும்பிலிலுந்து மட்டக்களப்பிற்கு 3 சொகுசு பேருந்துகளில் பயணித்தவர்கள் இன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வழிமறிக்கப்பட்டனர். பேருந்துகளில் 49 பேர் பயணித்தனர்.
அவர்களிடம் மாகாணங்களிற்கிடையில் பணிப்பதற்கான எந்த ஆவணங்களும் இருக்கவில்லை. அவர்களிடம் நடத்தப்பட்ட அன்ரிஜன் சோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியானது.
அவர்கள் கரடியனாறு சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்பட்டனர். ஏனையவர்கள் பரிசோதனையின் பின் வீடுகளிற்கு அனுப்பப்பட்டனர்.
சொகுசு பேருந்து நடத்துனர், சாரதிகள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1