இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவாகியுள்ளார்.
கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்காக இன்று இடம்பெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 96 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கலாநிதி மனில் பெர்ணான்டோ 90 வாக்குகளை பெற்றுக் கொண்டார்.
62 இணைந்த லீக்குகளில் இருந்து மொத்தம் 186 வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றனர். இன்று இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1