28.1 C
Jaffna
December 21, 2024
Pagetamil
இலங்கை

மின்னேரியாவில் யானைக்குட்டிகள் திருட்டா?: இராணுவம்- வனஜீவராசிகள் திணைக்களம் முறுகல் உச்சம்!

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் எதிர்வரும் ஜூலை 02 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.

மினேரியா தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் கடமைக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் போதிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாததால் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்படும் என்று, இலங்கை இணைந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் சங்கத் தலைவர் பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.

கடந்த வாரம் முழுவதும் யானை கடத்தல் மோசடி பற்றிய அறிக்கைகள் வனவிலங்கு பாதுகாப்புத் துறைக்கு கிடைத்ததாக தலைவர் கூறினார்.

ஜூன் 23 ஆம் திகதி இரைவு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்ட போது, இலங்கை இராணுவத்தின் இரண்டு வாகனங்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததையடுத்து, அவற்றை நிறுத்த முயன்றபோது அவை நிற்காமல் சென்றன.

ஹபரனவில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு சோதனைச் சாவடியில் வாகனங்கள் நிறுத்த உத்தரவிடப்பட்டும் நிறுத்தப்படவில்லை. வாகனங்கள் குற்றவியல் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அவற்றை விரட்டி சென்றுள்ளனர். கல்குலமவில் உள்ள ஒரு இராணுவ சோதனைச் சாவடியில் இரு வாகனங்களையும் நிறுத்த முயன்று, அதுவும் தோல்வியடைந்தது.

வாகனத்தை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விரட்டி சென்றனர். இரண்டு வாகனங்களும் 21 வது காலாட்படை பிரிவு தலைமையகத்திற்குள் நுழைந்தன, அதையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் திரும்பி வந்தனர்.

எனினும், முகாமிலிருந்து பல வாகனங்களில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரை இராணுவத்தினர் விரட்டியுள்ளனர்.

ஹபரனவில் ஒரு இராணுவச் சோதனைச்சாவடியில் அவர்கள் வழிமறிக்கப்பட்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கையடக்க தொலைபேசி பறிக்கப்பட்டதாக ஏற்கனவே முறையிட்டிருந்தனர். அந்த இடத்தில் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் வந்ததாகவும், அவர் நிலைமையை சுமுகமாக்கியதாகவும்  பிரபாஷ் கருணாதிலக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர், ஹபரன பொலிசாரிடம் முறையிட்டனர்.

இதேவேளை, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ மேஜர் ஜெனரலும், தனது பெயருக்கு பங்கம் விளைவிக்க முற்படுவதாக ஹபரன பொலிசாரிடம் முறையிட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த கோரி, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணையை நடத்தும்படி கோரியுள்ளனர்.

இதேவேளை, இன்று அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெலவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.

யானைக்குட்டிகள் காணாமல் போனதற்கான உறுதியான ஆதாரங்களை அவர்கள் நிறுவவில்லை, ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிய முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொதித்தெழுந்த சிவாஜி!

Pagetamil

யாழில் வீதிக்கு வந்த முதலைக்கு நேர்ந்த பரிதாபம்

Pagetamil

மின் கட்டணங்கள் இடைநிறுத்தம்

east tamil

முட்டையின் விலையில் வீழ்ச்சி

east tamil

கணவர் மீது முறைப்பாடு… விசாரிக்க சென்ற பொலிசாருக்கு கடி: லைக்கா கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Pagetamil

Leave a Comment