கௌதாரிமுனையில் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதை சரியில்லை என திரும்பி விட்டனர்.
கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை கடற்பரப்பில் சீன நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கடலட்டை பண்ணை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று (28) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்ஏ.சுமந்திரன் மற்றும் சி.சிறிதரன் ஆகியோர் சென்றிருந்தனர். இருப்பினும் அவர்கள் குறித்த இடத்திற்கு செல்லாது திரும்பிவிட்டனர்.
இது தொடர்பில் பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கையில்-
பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை சென்று பார்வையிடுவதற்காக இன்று வருகை தந்தனர். இருப்பினும் அவர்கள் மண்ணித்தலை கோவிலுடன் திரும்பி விட்டனர். அதற்கப்பால் செல்வதற்கு பாதை
சரியில்லை எனவும் தொடர்ந்து பயணிக்க முடியாது என்று தெரிவித்து விட்டு திரும்பி விட்டனர். இதற்கு நீண்டநேரம் தொலைபேசியில் உரையாடிவர்கள் பின்னர் இவ்வாறு தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர் என அவர்கள் தெரிவித்தனர்.