Pagetamil
இலங்கை

நீண்டகாலத்தின் பின் பிட்டு சாப்பிட்டேன்: விடுதலையான தமிழ் அரசியல் கைதியின் அனுபவம்!

நேற்று விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்,  தமக்கு பிடித்த உணவுவகைகளை நீண்ட பல வருடங்களின் பின்னர் நேற்றுத்தான் சாப்பிட முடிந்ததாக தெரிவித்தனர்.

தமிழ்பக்கத்துடன் உரையாடிய அரசியல் கைதிகள் சிலர், ஒரு வருடத்திற்கும் அதிக காலத்தின் பின்னர் பிட்டு, இடியப்பம், தோசை போன்ற விரும்பிய உணவை சாப்பிட்டதை சுட்டிக்காட்டினர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 பேர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என, 16 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா பெருந் தொற்றின் பின்னர் கடந்த வருடம் மார்ச் மாதத்தின் பின்னர் இலங்கையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிறைச்சாலை கட்டுப்பாடுகள், பயண கட்டுப்பாடுகள் காரணமாக வடக்கு கிழக்கில் இருந்து அநுராதபுரம் சிறையிலுள்ளவர்களை உறவினர்கள் சென்று சந்திப்பதில் நெருக்கடியிருந்தது.

அது தவிர, பொருளாதார நெருக்கடியிருந்தது.

இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிக காலம் அரசியல் கைதிகளை உறவினர்கள் பார்வையிடாத நிலைமையிருந்தது.

இதனால் வீட்டில் சமைத்து வரும் உணவு அவர்களிற்கு கிடைக்கவில்லை.

சிறைச்சாலையில் காலையில் பாணும், மதியம் மற்றும் இரவில் சோறும் வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றின் பின்னர், தினமும் இதே அட்டவணைப்படி உணவருந்தி வந்த அரசியல் கைதிகளில், விடுதலையின் பின்னர் நேற்று விரும்பிய உணவை உட்கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘அம்மா என்னை மன்னித்து விடுங்கள்’: யூடியூப்பர் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

பெண் சட்டத்தரணியை விடுவித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

Pagetamil

நாளை பாடசாலைகள் மீள ஆரம்பம்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

நீதிமன்றத்திற்குள் தலைவணங்காமை, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: பெண் சட்டத்தரணிக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!