கொரோனா பரவலை கட்டுப்படுத்த வீட்டிலிருந்தே பணியாற்றும் நடைமுறை உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இப்படியாக வீட்டிலிருந்து பணி செய்பவர்கள் அவ்வப்போது நிறுவனத்துடன் இணைப்பில் இருக்க, இணையவழி கூட்டங்கள் நடக்கும். அப்படியான கூட்டங்களில் 264 நாட்கள் தொடர்ந்து ஒரே உடை அணிந்த பெண்ணை பற்றிய செய்தி இது.
வேலைக்களை பொறுத்து சில நிறுவனங்கள் தினமும் கூட்டம் நடத்துவார்கள். சில நிறுவனங்கள் வாராவாரம் கூடுவார்கள்.
ஜெம் என்ற பெண் இப்படியாக கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார். இவர் அலுவலகத்தில் அவ்வப்போது கூட்டங்கள் நடக்கும். பெரும்பாலும் தினமும் கூட்டம் இருக்கும்.
அந்த நிறுவனத்தின் முதலாவது இணைய கலந்துரையாடல் 2020 ஏப்ரல் 2ஆம் திகதி நடந்திருக்கிறது. அப்பொழுது அவர் ஒரு ஹாவாய் டைப்பில் உள்ள நீல நிறத்தில் பூ போட்ட சட்டையை போட்டு கூட்டத்தில் கலந்து கொண்டார்
அதன் பின் நடந்த ஒவ்வொரு ஒன்லைன் கூட்டத்திற்கும், அவர் அதே சட்டையில் தான் வந்துள்ளார். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்கவேயில்லை. இந்நிலையில் அவருக்கு வேறு ஒரு இடத்தில் பணி கிடைத்தன் காரணமாக அவர் தற்போது உள்ள நிறுவனத்தின் கடைசி நாளில் இருந்தார் அன்றைய மீட்டிங்கில் அவருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதில் அவர் தான் கடந்த 15 மாதங்களாக தினமும் ஒரே டிரெஸ்ஸில் தான் மீட்டிங்கிற்கு வருவதாகவும், இதுவரை 264 மீட்டிங் இது போல வந்திருப்பதாகவும் கூறினார் இதை கேட்ட மற்றவர்களுக்கு பெரிய ஷாக்காக இருந்தது. இதுவரை யாரும் அவரது இந்த ஸ்டைலை கண்டுபிடிக்கவில்லை. இதைஅவர் தனது டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ யூடியூபிலும் வந்துள்ளது.