24.8 C
Jaffna
January 6, 2025
Pagetamil
இலங்கை

போரின் வடுக்களிலிருந்து மீண்ட சமுதாயமாக நாங்கள் மாறவில்லை’- ஜோசப் ஜெயகெனடி

“போரின் வடுக்களிலிருந்து நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்” என வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ள சிறுவர்களின் தற்போதைய நிலை தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அன்று வடமுனையில் சிறுவர்கள் போராளிகளாக நிற்கின்றார்கள் என்று விமர்சித்த சர்வதேச அரங்கு இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட ரீதியில் துன்பப்படுகின்ற, வேதனைப்படுகின்ற அவலங்களை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகத்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது. இருப்பினும் வடக்கு கிழக்கில் எடுக்கப்பட்ட தகவல்களின்படி உண்மையிலேயே சிறுவர் தொழிலாளிகள் என்ற தகவல்கள் சரியாக இல்லாவிட்டாலும் தந்தையை இழந்த சிறுவர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

அதே போல் தந்தையை இழந்து தாய் தொழில் தேடி வெளிநாடு செல்கின்ற சிறுவர்கள் அதிகமாகவும் இருக்கின்ற இந்த நிலைமையில், சிறுவர்கள் வேலைக்கு சென்று தான் தமது குடும்பங்களை பார்க்க வேண்டிய ஒரு அவலத்திக்குள் தள்ளப்படுவதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடைகளிலும் சரி, வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களிலும் சரி, தெரு ஓரங்களிலும் சரி பல சிறுவர்கள் ஊதுபத்தி விற்கின்றார்கள். அச் சிறுவர்களை நாங்கள் துரத்தி பிடித்து வேதனைப்படுத்துகின்ற சம்பவங்கள் அதிகமாகவே இருக்கின்றது. அவர்களை வினவுகின்ற போது, “அப்பா இல்லை, அம்மா வெளிநாடு போயிட்டா, அல்லது அம்மா மறுமணம் செய்து விட்டா, நான் அம்மம்மாவுடன் இருக்கின்றேன்”. என்று சொல்கின்ற துன்பமான செய்தியாகத்தான் அவர்களிடம் கேட்க கூடியதாக இருக்கின்றது. எனவே இதை மாற்றி அமைப்பதற்கு நாங்கள் ஆக்கபூர்வமான பல பணிகளை செய்தாக வேண்டி இருக்கிறது.

சிறுவர்கள் தொழிலாளியாக காரணங்கள் உண்மையிலே போரின் வடுக்களிலிருந்து நாங்கள் மீண்ட சமுதாயமாக மாறவில்லை. அந்த போரின் வடுவிலிருந்து பாதிக்கப்பட்ட துன்பப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இங்கும் அந்த அவலத்தை சந்தித்து கொண்டிருக்கின்றார்கள்.

அதாவது குடும்பத்தில் பிள்ளையை பராமரிப்பதற்கு அம்மா இருக்க வேண்டும். அந்த அம்மாவுக்கு ஒரு தொழில் வாய்ப்பினை வழங்கி, அந்த அம்மா ஊடாக அவர்கள் குடும்பத்தை கட்டி எழுப்புவதற்கான வசதி வாய்ப்பை ஏற்படுத்துவோமாக இருந்தால், நிச்சயம் எங்களுடைய தாயகம், எங்களுடைய நாடு விடிவுபெறும் என நான் நம்புகிறேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மருந்தகத்தின் உரிமையாளர் கைது

east tamil

UPDATE – காட்டிற்குள் உல்லாசமாக சென்ற எட்டு பேர் கைது

east tamil

உலகில் விசா பெற எளிதான நாடுகளின் தரவரிசையில் இலங்கை 33வது இடத்தில்

east tamil

Leave a Comment