பொலிஸ் பிணையில் விடுதனையான தலவாக்கலை, லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன் உட்பட ஏழு பேர் பொது சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறைய மீறி விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தலவாக்கலை நகரசபை தலைவர் உட்பட தலவாகலை நகர வர்த்தகர்கள் ஆறுவர் தலவாக்கலை பொலிஸாரினால் நேற்று (20) கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி தனியார் மண்டபம் ஒன்றில் விருந்துபசாரத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைய தலவாக்கலை பொலிஸார் சோதனையிட்ட போது அங்கிருந்த நகர சபைதலைவர் உட்பட வர்த்தகர்கள் 06 பேர் அடங்களாக 07 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் வழக்குபதிவு செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து தலவாக்கலை பொலிஸார் கொட்டகலை பொது சுகாதார காரியலயத்திற்கு அறிவித்ததையடுத்து பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தலைமையிலானோர் நகர சபை தலைவர் உட்பட விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட ஆறு வர்த்தகர்களையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.