மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் இராணுவ வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
கொவிட் தொற்றாளர்களை ஏற்றியிறக்கும் சேவையில் ஈடுட்டிருந்த பேருந்துடனேயே இராணுவத்தினரின் வாகனம் மோதியுள்ளது. விபத்து நடந்த போது 27 தொற்றாளர்களை ஏற்றியபடி பேருந்து சிகிச்சை மையத்திற்கு சென்று கொண்டிருந்தது.
குறித்த பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் சம்பவம்தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1