தேனி மாவட்டத்தில் தாய் இல்லாத ஆட்டுக்குட்டிக்குப் பசுமாடு ஒன்று வளர்ப்புத்தாயாக அன்பு செலுத்தி வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கணேசன். இவர் 50 ஆடுகள், 8 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் கொட்டகையில் வளரும் ஆடு ஒன்று இரு மாதங்களுக்கு முன்பு குட்டி ஒன்றை ஈன்றது. ஆட்டுக்குட்டி பிறந்த ஒரு மாதத்தில் தாய் ஆடு கழிச்சல் நோய் பாதிக்கப்பட்டு இறந்தது.
இதனால் ஆட்டுக்குட்டிக்கு புட்டிபால் கொடுத்து வளர்க்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் அதே இடத்தில் வளர்க்கப்படும் பசுமாடு ஆட்டுக்குட்டி தடவிக் கொடுத்து அன்புடன் வெளிக்காட்டி தாய்மையுடன் பழகியது.
இப்போது தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்குத் தாயாக இருந்து கடந்த 2 மாத காலமாகப் பால் கொடுத்து வளர்த்து வருகிறது.
அதேவேளைக் கொட்டகையில் வளரும் பிற ஆட்டுக்குட்டிகளுடன் இந்த பசு பழகுவது இல்லை. தாயை இழந்த ஆட்டுக்குட்டியுடன் மட்டுமே ஒட்டி உறவாடி தாய்மையை வெளிப்படுத்துகிறது என அதனை வளர்க்கும் கணேசன் சொல்லியிருக்கிறார்.