கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் அமைந்துள்ள கரும்புத் தோட்டக் காணியில் உடனடியாக விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்றது.
கரும்பு தோட்டமாக அடையாளப்படுத்தப்படுகின்ற சுமார் 196 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பு, நீண்ட காலமாக சரியான பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது.
குறித்த காணியில் பயிர்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கு அந்நப் பிரதேசத்தினை சேர்ந்த சமூக அமைப்புக்கள் ஆர்வம் வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், இன்றைய கூடடத்தில் அதுதொடர்பாக ஆராயந்து தீரமானம் மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள விரும்புகின்றவர்கள் தேவையான அனுமதிகளைப் பெற்று உடனடியாக சிறுபோக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பிரதேசத்தில் முழுமையாக கரும்புத் தோட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக இருக்கின்ற போதிலும், உடனடியாக அதனை நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும்.
எனவே, உப உணவுப் பயிர்செய்கையை மேற்கொள்வதுடன் படிப்படியாக கரும்புப் செய்கை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.