25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

வடக்கு அரச அலுவலர்கள் வழங்கிய கொரோனா நிதிக்கு நடந்தது என்ன?: தகவல் அறியும் உரிமை சட்டத்தால் வெளியான தகவல்!

மு.தமிழ்செல்வன்

வடக்கு மாகாணத்தில் உள்ள அரச உத்தியோத்தகர்களிடம் கடந்த வருடம் ஆளுநர்
அலுவலகம் கொரோனாவுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கு அமைவாக வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் நிதிப்பங்களிப்புச்
செய்திருந்தனர். இதன் மூலம் மொத்தமாக 2 கோடியே 38 இலட்சம் ரூபா நிதி
திரப்பட்டுள்ளது. இந்த நிதி  பிரதி பிரதம செயலாளர்(நிதி) அலுவலக வங்கி
கணக்கில் வைப்பில் உள்ளது.

கொவிட் 19 கட்டுப்படுத்தும் பொருட்டு வடக்கில் மேற்கொள்ளவுள்ள பணிகளுக்காக
அரச உத்தியோகத்தகர்களிடம் மேற்படி நிதி பெறப்பட்டிருந்தது. ஆனால் குறித்த
நிதியில் 30 முப்பது இலட்சம் ரூபாவை தேசிய கொவிட் 19 நிதியத்திற்கு
வழங்கிவிட்டு மிகுதி 2 கோடியே எட்டு இலட்சம் ரூபாவினை வீட்டுத்திட்டம்
மற்றும் மலசல கூடம் அமைக்க பயன்படுத்துவதாக ஆளுநர் அலுவலகம்
அறிவித்துள்ளது.

கடந்த 10.06.2021 அன்று கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும்
உரிமைச்சட்டம் ஊடாக  ஆளுநர் அலுவலகத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக
17.06.2021 அன்று வழங்கிய தகவலில் குறித்த நிதியானது பிரதி பிரதம
செயலாளர் ( நிதி) அலுவலக வங்கி கணக்கில்  வைப்பில் உள்ளது என்றும், இதனை
திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், அமைச்சின் செயலாளர்கள்
ஆகியோருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு
அமைவாக வடக்கு மாகாணத்தில் கொவிட் 19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு
வருமானம் இழந்து வாழ்வாதாரம் குன்றி நலிவடைந்து வாழ்விடங்களும் இன்றி
இருக்கின்ற குடும்பங்களுக்கு  ஒரு பயனாளிக்கு 9 இலட்சம் ரூபா படி 20
பயனாளிக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கும் அவ்வாறே ஒரு பயனாளிக்கு
140000.00 ரூபா படி 20 பயனாளிகளுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்கும்
வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.

வடக்கில்  மாகாண சபைக்கு கீழ் இயங்குகின்ற மாவட்ட வைத்தியசாலைகள் உட்பட
பல வைத்தியசாலைகளில்  பல தேவைகள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. குறித்த
தேவைகளை பூர்த்தி செய்து தருமாறு அவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும்,
நேரடியாகவும் பலரிடம் வினயமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த
தேவைகளில் பல கொரோனா தொற்று நீங்கிய பின்னரும் வைத்தியசாலைகளுக்கு
தொடர்ச்சியாக தேவைப்படுகின்றனவாக உள்ளன. குறிப்பாக வடக்கில் யாழ் போதனா
வைத்தியசாலைக்கு அடுத்த நிலையில் காணப்படும், மாகாணசபையின் ஆளுகையின்
கீழ் வரும் வவுனியா வைத்தியசாலையில் ஒட்சிசன் உற்பத்தி இயந்திரம் இல்லை

மிகத்தூய மருத்துவ ஒட்சிசன் உற்பத்தி இயந்திரத்தினை பெறுவதற்கு தேவையான அண்ணளவான தொகை ரூபாடி5,000இ000- 10,000,000  வரை தேவைப்படுகிறது. இதேவேளை மாகாண நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இன்னொரு மாவட்ட பொது வைத்தியசாலையான மாஞ்சோலை முல்லைத்தீவு மருத்துவமனை சமூக வலைத்தளங்களில் தங்களது தேவைகள் குறித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவர்களின் கோரிக்கைகளில்  தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் கொரனா
சிகிச்சைக்கு மட்டுமான உபகரணங்கள் அல்ல. அவை அடிப்படை உயிர்காப்பு
உபகரணங்கள் ஆகும். கொரனா கட்டுப்பாட்டிற்குள் வந்து இல்லாமல் போனபின்பும்
இந்த மருத்துவ உபகரணங்கள் மக்களின் உயிர்களைக் காப்பதற்கு
அத்தியாவசியமானவை. அவ்வாறான அடிப்படை மருத்துவ உபகரணங்கள் அற்ற நிலையில் ஒரு மாவட்ட பொது வைத்தியசாலை மாகாணத்தில் இருக்கும்போது, கொரோனாவின் பெயரால் அவர்கள் கோரியுள்ள அண்ணளவாக ஒன்பது மில்லியன் பெறுமதியானமருத்துவ உபகரணங்களை கொரனாவின் பெயரால் சேகரித்த நிதியை உபயோகித்துப் பெற்றுக்கொடுக்காமல் விட்டது ஏன்?

இதனை தவிர கொரனா சிகிச்சைக்கு அத்தியாவசியமானவையாக உள்ள சில அடிப்படை
மருத்துவ உபகரணங்களின் தேவை வடக்கில் காணப்படுகிறது. இந்த உபகரணங்களின்
சந்தைப் பெறுமதியும் பின்வருமாறு காணப்படுகிறது.

ஒட்சிசன் செறிவாக்கி (Oxigen Concentrator)- – 200,000.00
நாடிஒட்சிசன் அளவுமானி (pulse oximeter)- – 5000.00 – 15000.00
பல்வகை அளவுமானி (Multipara Monitor) -300,000.00 -500,000 0.00
நாளதிரவ பம்பி (Infusion pump) -50,000.00-100,000.00
சிபப் இயந்திரம்(C-PAP இயந்திரம்)- – 200,000.00 -1,000இ000.00
செயற்கை சுவாச இயந்திரம் (Theraputic Ventilator)-3,000,000.00  – 5,000,000.00

எனவே இவ்வாறு பல தேவைகள் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் தேவையாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொவிட் 19 க்காக சேகரிக்கப்பட்ட
நிதியினை பிறிதொரு தேவைக்கு பயன்படுத்துவது தொடர்பில் பலரும் விசனம்
தெரிவித்துள்ளனர்.

மாவட்ட வைத்தியசாலைகள் தொடக்கம் பிரதேச வைத்தியசாலைகள் என மாகாணத்தில் பல வைத்தியசாலைகளில் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
எனவே இந் நிதியை கொண்டு அவற்றினை நிவர்த்தி செய்திருப்பினும் அதன் பயன்
அனைத்து மக்களையும் சென்றடைந்திருக்கும்.  மாறாக 20 பயனாளிகளுக்கு
வீடுகள் வழங்குவது என்பது பொருத்தமற்ற தீர்மானமாகும் என மூத்த சுகாதார
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுகாதார துறைக்கு என கோரிய நிதியை அதிக தேவையுள்ள அத்துறைக்கு
பயன்படுத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் பரந்துப்பட்ட பயன் கிடைத்திருக்கும் என்பது பலரது கருத்தாகும். எனவே வடக்கில் உள்ள அரச உத்தியோகத்தர்களிடம் சேகரிக்கப்பட்ட 2 கோடியே 38  இலட்சத்தில், 30 இலட்சம் கோவிட் நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலையில் மிகுதி பணம் வடக்கின் அதிக தேவைகளோடு உள்ள சுகாதார துறைக்கு செலவு செய்யப்படுமா?

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

அனுரவை சந்திக்க முடியாவிட்டால் கழுத்தை அறுப்பேன்: வாளுடன் ரகளை செய்தவர் கைது!

Pagetamil

பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணை இழுத்துச் சென்ற முதலை!

east tamil

Leave a Comment