மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை தோண்டி, மீள உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருதயபுரத்தை சேர்ந்த 21 வயதான சந்திரன் விதுஷன் பொலிசாரால் கைது செய்யப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். அவர் 4 ஐஸ் போதைப்பொருள் பக்கட்டுகளை விழுங்கியதால், அது உடலுக்குள் வெடித்து உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்ததாக பொலிசார் அறிவித்தனர்.
எனினும், பொலிசார் தாக்கியதாலேயே விதுஷன் உயிரிழந்ததாக பெற்றோர் குறிப்பிட்டனர். தமது கண் முன்னே அவர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1