கொழும்பு மாவட்டத்தில் இருந்து நேற்று 562 கோவிட் -19 தொற்ளாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
COVID-19 தொற்றை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று 2,372 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,064 ஆக உயர்ந்தது.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து 562 பேர், கம்பஹா மாவட்டத்தில் இருந்து 455 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 234 பேர், இரத்னபுரி மாவட்டத்தில் இருந்து 217 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 188 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 118 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 115 பேர், புட்த்தளம் மாவட்டத்தில் இருந்து 70 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து 63 பேர், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தலா 49 பேர், நுவரெலியா, அம்பாறை மாவட்டத்தில் இருந்து தலா 46 பேர்,அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 36 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 32 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 22 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 16 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 13 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 10 பேர், மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து தலா 08 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 3 பேர், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா ஒருவர் அடையாளம் காணப்பட்டனர்.
வெளிநாட்டிலிருந்து வந்த 17 பேர் தொற்றிற்குள்ளாகியுளளனர்.