சாவகச்சேரி, சரசாலை,குருவிக்காடுப் பகுதிக்குள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த குழுவை மதுவரித் திணைக்களத்தினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன் போது 150,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் 35,000 மில்லி லீற்றர்கசிப்பு அடங்கலாக கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை காலத்தில், மதுபான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இநத பகுதியில் நடப்பதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கமைய உதவி மது வரி ஆணையாளர் க.தர்மசீலன் அவர்களது அறிவுறுத்தலுக்கு அமைய, மது வரி அத்தியட்சகர் ரி.தங்கராசா, சாவகச்சேரி மதுவரி அதிகாரி த.அசோகரத்தினம் ஆகியோரின் வழி நடத்தலில் குறித்த சுற்றிவளைப்பை சாவகச்சேரி மது வரி திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர்.
சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.