கொழும்பு துறைமுகத்திற்கு வெளியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி விபத்திற்குள்ளானதை தொடர்ந்து, நாட்டின் கரையோரங்களில் ஒதுங்கிய 1,500 தொன் கழிவுககளை இலங்கை கடற்படை அகற்றியுள்ளது.
உஸ்வெத்தகெயாவ, எலெனெகொட, சரக்குவ மற்றும் கெபுங்கொட கடற்கரைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகள் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மே 26ஆம் திகதி தொடக்கம் கடற்படை, ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து கடற்கரைகளை சுத்தம் செய்து வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1