எரிவாயு விலை அதிகரித்தால் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் இதனை தெரிவித்தார்.
ஒரு பொதி சோறு உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதற்கேற்ப உயரும் என்று கூறினார்.
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .700 ஆக அதிகரிக்க எரிவாயு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டன, நுகர்வோர் விவகார அதிகாரசபை அதற்கு பதிலாக ரூ .400 அதிகரிக்க பரிந்துரைத்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை ஒரு கணக்கெடுப்பை நடத்தி வருவதாகவும், கணக்கெடுப்பைத் தொடர்ந்து விலை உயர்வுக்கு அனுமதி வழங்குவதாகவும் அவர் கூறினார்.
நுகர்வோர் விவகார ஆதிகாரசபை, நுகர்வோலை பாதுகாக்கவில்லை, நிறுவனங்களையே பாதுகாப்பதாகவும் அவர் கூறினார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1