25.5 C
Jaffna
December 29, 2024
Pagetamil
இலங்கை

கொரோனாவால் நாங்கள் மின்னஞ்சல் பார்ப்பதில்லை: வடக்கு ஆளுனர் அலுவலகம் சொன்ன ‘பகீர்’ பதில்!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்ட்ட கோரிக்கை தொடர்பில் விண்ணப்பதாரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவிய போது கொரோனா காரணமாக
மின்னஞ்சல் பார்ப்பதில்லை என தகவல் வழங்கும் அலுவலர் பதிலளித்துள்ளார்.

கடந்த 10.06.2021 அன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் hgnp.op@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கிளிநொச்சியிலிருந்து ஊடகவியலாளர் ஒருவர் சில தகவல்களை கோரி விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் குறித்த மின்னஞ்சல் கோரிக்கைக்கு ஆளுநர் அலுவலகத்திலிருந்து 17.062021வரை எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர், அலுவலகத்தின் குறித்த பகுதிக்கான தொலைபேசி இலக்கமான 021 2220660 இற்கு தொடர்புகொண்டு வினவிய போது கொரோனா காரணமாக மின்னஞ்சல் பார்ப்பது இல்லை என்றும் உத்தியோகத்தர்கள் கடமைக்கு வருவதில்லை எனவும் தெரிவித்த அவர், விரைவில் பதில் அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையில் இயன்றளவு பணிகளை ஒன்லைன் மூலம் மேற்கொள்ளுமாறும், வீடுகளில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் மேற்குறித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment