கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,411 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
2020 மார்ச்சில் தனிமைப்படுத்தல் விதிகள் அமுலாகிய பின்னர் நாளொன்றில் கைதான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளியாபிட்டியவில் 158 பேர், மாத்தளையில் 146 பேர், கண்டியில் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.