27 C
Jaffna
December 23, 2024
Pagetamil
இலங்கை

வவுனியா வாடிவீட்டின் பின்னணியில் அரசியல்; பொலிசாருக்கு எதிராக முறைப்பாடு: வவுனியா நகரசபை தலைவர்!

வவுனியா பொலிசாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்தார்.

நேற்றயதினம் வவுனியா நகரசபை தலைவர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்….

எந்தவித முன்னறிவித்தலுமின்றி நகரசபைத்தலைவரான என்னை பொலிஸ் நிலையம் அழைத்து கைதுசெய்தனர். பொலிசாருடைய செயற்பாடு பக்கச்சார்பான செயற்பாடாகவே இருந்தது. அதிகாரபலமும் அரசியல், பணபலமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலைமையை நேற்றுஅறியமுடிந்தது. எனவே சாதாரணமக்களுக்கான நீதி இந்த பொலிஸ்நிலையங்களில் எப்படி கிடைக்கும் என்பது கேள்வியாகவுள்ளது. அத்துடன் எமது உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பொலிசாரின் அசமந்தப்போக்கே.

தனிப்பட்ட நபர்களிற்காக அரச உத்தியோகத்தர்களை கைதுசெய்வதும், அச்சுறுத்துவதும் எந்தவகையில் நியாயமான செயற்பாடாக இருக்க முடியும். இப்படியான பொலிசாரால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கே அவமானம் ஏற்ப்பட்டுள்ளது. ஒரு நீதிபதியை போல வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி எனக்கு பதிலளித்தார். பொலிஸ்நிலையம் நீதிமன்றம் போலவே இயங்குகின்றது. எனவே பொலிசாரின் அசமந்தப்போக்கு மற்றும்அரசியல் பிண்ணனியினை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் பொலிஸ்சேவை ஆணைக்குழுவிற்கு இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளோம், வடமாகாண ஆளுனர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை பதிவுசெய்யவுள்ளோம்.

அத்துடன் குறித்த விடுதியினூடாக நகரசபைக்கு சேர வேண்டிய மிகுதி பணத்தினை நீதிமன்றமூடாக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். அத்துடன் வாடிவீடு என்பது நகரசபையின் சொத்து. அதனை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம். குறித்த விடுதிக்கு அருகில் பிரபல பாடசாலை, மற்றும் இந்து இளைஞர் சங்கம், சாய்பாபா மடம், மற்றும் நீதிபதியின் வதிவிடம் ஆகியன அமைந்துள்ளன.

எனவே குறித்த இடத்தில் மதுபானசாலை ஒன்று தேவையில்லை என்று நாம் கருதுகின்றோம். எனவே வேறு பொது விடயங்களிற்காக அந்த இடத்தினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். காலப்போக்கில் அது சரிவரும். அத்துடன் மதுபானத்தை விற்று குடியை கெடுக்கும் செயலை நகரசபை செய்யாது.

வவுனியா வாடிவீட்டினை நடாத்துபவர்கள் இரண்டு வருடமாக நகரசபைக்கு வாடகை செலுத்தவில்லை. அதனால் 12 இலட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கான அறிவித்தல் மூன்று மாதங்களிற்கு முன்பாகவே அவர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர்கள் பதிலளிக்காத காரணத்தினால் நேற்று முன்தினம் எமது வெளிக்கள உத்தியோகத்தர்களுடன் சென்று அறிவித்தல் ஒன்றை ஒட்டியிருந்தோம். இதன்போது அங்கிருந்த இனம் தெரியாத நபர்கள் எங்களுடன் முரன்பட்டனர். அத்துடன் எமக்கு எதிராக பொலிசில் பொய்யான முறைப்பாட்டினையும் செய்திருந்தனர். எமது ஊழியர்களை கடமையை செய்யாமல் கலவரத்தை ஏற்ப்படுத்தியிருந்தனர். இது தொடர்பாக நகரசபை சார்பில் பொலிசாரிடம் முறைப்பாடுஒன்றும் பதிவுசெய்யப்பட்டது.

எந்தவித ஆவணங்களும் இல்லாமல் குறித்த விடுதியை சிலர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அது அரசுக்கும் நகரசபைக்கும் உரித்தான சொத்து. இதற்கு பின்னால் அரசியல் கட்சி சார்ந்த பிரமுகர் ஒருவர் இருப்பதாக அறிந்துள்ளோம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஒரு கட்சிசார்ந்த அலுவலகம் அந்த விடுதியில் செயற்ப்பட்டிருந்தது. விடுதியின் முகாமையாளர் அந்தக் கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு பணரீதியாக பல்வேறு உதவிகளை செய்திருந்தார். அதற்கு நன்றிக்கடனாக அந்த விடுதியை அவருக்கே வழங்குவதற்கு உறுதிசெய்துள்ளதாக அறிந்துள்ளோம் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனங்கிளப்பில் தாறுமாறாக தறிக்கப்படும் பனைகள்: சாவகச்சேரி பொலிசார் ‘பம்மி’யதன் பின்னணி என்ன?

Pagetamil

பாடசாலை ஆரம்பிக்கும் திகதி பற்றிய அறிவிப்பு

Pagetamil

அனுர அரசுக்கு யாழில் எச்சரிக்கை விடுத்த பட்டதாரிகள்!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

அடையாள அட்டையின்றி பக்கத்து கடைக்கு சென்றவரை கைது செய்த பொலிசார் இடமாற்றம்!

Pagetamil

Leave a Comment