எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவர் அர்ஜுன ஹெட்டியராச்சி குற்றவியல் புலனாய்வுத் துறையால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பல் விபத்தின் விளைவாக ஏற்பட்ட பேரழிவு குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய ஹெட்டிராச்சி இன்று காலை சிஐடி முன் ஆஜரானார்.
எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவன தலைவரை கைது செய்ய சட்டமா அதிபர், நேற்று அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, கப்பலின் கப்டன் மற்றும் தலைமை மற்றும் துணை பொறியாளர்களிடமிருந்து அறிக்கைகளை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடைவிதித்தது.
திங்கள்கிழமை (14) கைது செய்யப்பட்ட கப்பலின் கப்டன் பின்னர் ரூ. 02 மில்லியன் பிணையில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக சிஐடி இதுவரை 33 அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உள்ளூர் முகவர் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து மேலும் அறிக்கைகள் பதிவு செய்யப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.