தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகோதரர் விசப்பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில் நேற்று இரவு உறவினர் வீடொன்றிற்கு சென்று, தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது, விசப்பாம்பு காலில் தீண்டியுள்ளது.
அவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமயத்தில், கட்சி நடவடிக்கைகளை பிரதானமாக அவரே கவனித்துக் கொண்டிருந்தார். கட்சிக்குள் அவரது பிடி அழுத்தமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1
1