25.3 C
Jaffna
January 15, 2025
Pagetamil
இலங்கை

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் மாயம்!

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.

இன்று பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக் கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் அருமைநாதன் (40) என்று தெரியவந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘இளம் பெண்களை நிர்வாணமாக்கி….’- வெளிநாட்டு வேலைக்கு சென்று திரும்பிய தமிழ் பெண் வெளியிட்ட அதிர்ச்சிக் கதைகள்!

Pagetamil

அனுரவிற்கு மக்கள் வாக்களித்தது ஊழல், மோசடியை சுத்தம் செய்யவே தவிர வாகன உதிரிப்பாகங்களை கழற்ற அல்ல!

Pagetamil

ஜனநாயக போராளிகள் கட்சியின் இளைஞர் அணியின் பொங்கல் நிகழ்வு

east tamil

இரத்தினக் கற்களை கடத்த முயன்ற சீன தந்தை, மகன் கைது

east tamil

சீன ஜனாதிபதியை சந்திக்கும் அனுர

east tamil

Leave a Comment