கிளிநொச்சி மருதநகர் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 பேர் பொலிஸாரிடம் சிக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 04 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாவும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த நபர்களுக்கு எதிராக பயணக்கட்டுப்பாட்டினை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டிலும் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1