பொது மற்றும் தனியார் துறைகளில் ஊழியர்களை தேவையின்றி அழைப்பதைத் தவிர்க்குமாறு அந்த நிறுவனங்களின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா.
அத்தியாவசிய சேவைகளை குறைந்தபட்ச ஊழியர்களின் மூலம் நடத்திச் செல்லுமாறு கேட்டுள்ளார்.
இதேவேளை, பிரதேச செயலகங்களினால் அனுமதிக்கப்படாத வர்த்தக நிலையங்களை மூடுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு பிரதேச செயலக பகுதிகளிலும் இயங்குவதற்கு பல வணிக வளாகங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், பல பகுதிகளில் உரிமம் பெறாத வணிக வளாகங்களும் திறக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் அங்கீகரிக்கப்படாத வணிக நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கவும், மோட்டார் சைக்கிள் அணியின் கண்காணிப்பை மேற்கொள்ளவும் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.