பால்வெளி மண்டலத்தில் புதிய நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சிலி நாட்டிலுள்ள விஸ்டா என்ற தொலைநோக்கி கொண்டு நடத்தபட்ட ஆய்வில் இந்த VVV-WIT-08 என்ற நட்சத்திரத்தைக் கண்டறிந்தனர். ஏறத்தாழ 25,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த நட்சத்திரம் அவ்வப்போது மிகவும் பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டுபிடித்துள்ளனர்.
துணைக் கோள் ஒன்றினை இந்த நட்சத்திரம் சுற்றி வருவதால் அந்தத் துணைக் கோளிடமிருந்து வெளிச்சத்தை உள்வாங்கி, பின்னர் வெளியிடும் தன்மையை VVV-WIT-08 நட்சத்திரம் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதன் அருகிலேயே சூரியனை விட 100 மடங்கு பெரிதான மற்றொரு நட்சத்திரம் இருப்பதைக் கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள் அதுகுறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1