எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு பதிலாக எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்குமாறு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரியுள்ளன.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின், ஐக்கிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பலித இது தொடர்பில் குறிப்பிடுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2019 முதல் பல சந்தர்ப்பங்களில் குறைந்துவிட்டாலும் , உள்நாட்டில் விலைகளை அரசாங்கம் குறைக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 68 அமெரிக்க டொலரிலிருந்து 18 அமெரிக்க டொலராகக் குறைக்கப்பட்டதாக பாலித கூறுகிறார்.
இருப்பினும், துளி சலுகையை பொதுமக்கள் பெறவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னாள் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர முன்னர் குறிப்பிடுகையில், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் இலாபத்தின் மூலம், பொதுமக்களிற்கான ரின் மீன், பருப்பு சலுகைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். சலுகை இரண்டு வாரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனாலும் இப்பொழுது விலை நான்கு மடங்கு அதிகரித்ததாகக் ஆனந்த பலித கூறினார்.