நாடு முழுவதும் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாவிட்டால், தினசரி நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை குறைவடையுமென எதிர்பார்க்க முடியாது என்றார்.
ஒரு நிறுவனம், அலுவலகங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் வரவழைக்கக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும், வீதிகளில் சுற்றும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், உணவு மற்றும் பிற அத்தியாவசிய விநியோக சேவைகளை விரிவுபடுத்தவும் பெர்னாண்டோ முன்மொழிந்துள்ளார்.
தொற்று வீதத்தைக் குறைப்பதில் பொதுமக்களின் ஆதரவும் மிக முக்கியமானது என்றார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1