வல்வெட்டித்துறை கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும் தீர்மானம் வல்வெட்டித்துறை நகரசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
சபை தவிசாளரினால் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும் எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார்.
வல்வெட்டித்துறை கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தை பொதுமக்களிடம் கையளிக்க வல்வெட்டித்துறை நகரசபை நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறது. அந்த காணிக்கு உரிமை கோரும் நபர், அங்கு அத்துமீறி ஆட்கள் விளையாடுவதாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இன்று வல்வெட்டித்துறை நகரசபை அமர்வு இடம்பெற்ற போது, அந்த வழக்கில் நகரசபை சாதகமான தீர்ப்பை பெறவில்லையென தெரிவித்த தவிசாளர், மேன்முறையீடு செய்ய சபையின் அங்கீகாரத்தை கோரினார்.
எனினும், இந்த தீர்மானம் சபையில் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டது.