15 வயதான சிறுமியொருவரை பணத்திற்கு வாங்கி, அவரை வைத்து இணையத்தளம் மூலம் பாலியல் வர்த்தகம் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை பற்றி, தமிழ்பக்கம் நேற்று (9) செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மவுண்ட் லவ்னியா பொலிசாரால், கடந்த 8ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவர் அழகிய யுவதிகளை விலைக்கு வாங்கி, பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுவது தொடர்பாக நீண்டநாளாக அறியப்பட்ட ஒருவராக இருந்துள்ளார்.
இறுதியாக, தாயொருவரையும், அவரது 15 வயதான மகளையும் விலை கொடுத்து வாங்கி, பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்திய போது சிக்கியுள்ளார்.
15 வயதான சிறுமியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, இணையத்தளம் ஊடாக பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
சிறுமியின் தாயாரை அவிசாவளை பகுதியிலுள்ள தொழிலதிபர் ஒருவருக்கு 21 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
15 வயதான மகளை மவுண்ட் லவனியாவிலுள்ள ஒரு சொகுசு குடியிருப்பில் தங்க வைத்துள்ளார்.இணையத்தளங்கள் வாயிலாக விளம்பரம் செய்து, சிறுமியை பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தியுள்ளார். அப்படி வரும் வாடிக்கையாளர்கள் சிறுமியுடன் ஒரு மணி நேரம் தங்கியிருக்க ரூ .10,000 அறவிட்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுமி முதன்முதலில் வெள்ளவத்தையிலுள்ள ஒரு முதியவருக்கு ரூ .300,000 க்கு விற்கப்பட்டமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மவுண்ட் லவ்னியா ஸ்டேஷன் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனையிட்டனர். அங்கிருந்து 15 வயது சிறுமியும் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த 3 சிறுவர்களும் பொலிசாரால் பொறுப்பேற்கப்பட்டனர்.
இரண்டு சிறார்கள், பாலியல் வர்த்தக சூத்திரதாரியின் முந்தைய திருமணங்களில் பிறந்தவர்கள். மற்றைய சிறுவன், பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமியின் தம்பி.
பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட தாயும், மகளும் பியகம பகுதியை சேர்ந்தவர்கள்.
சிறுமியின் தாயுடன் உறவை ஆரம்பித்த சூத்திரதாரி, அவர்களை மொரட்டுவ புறநகரிலுள்ள வீடொன்றிற்கு அழைத்து சென்று தங்க வைத்துள்ளார்.
பணத்திற்காக விற்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் பியாகாமா பகுதியில் வசிப்பவர்கள். சந்தேகநபர், சிறுமியின் 32 வயதான தாயுடன் உறவு வைத்து மொரட்டுவ புறநகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்தார்.
சிறிது நாளின் பின்னர் 32 வயதான தாயை அவிசாவளையிலுள்ள வயோதிப செல்வந்தருக்கு 21 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
விற்கப்பட்ட தாயின் 15 வயதான மகளையும், தம்பியையும், தனது இரண்டு பிள்ளைகளையும் மவுண்ட் லவ்னியா ஸ்டேஷன் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்துள்ளார். அந்த குடியிருப்பிற்காக நாளொன்றிற்கு ரூ .5 ஆயிரம் வாடகை செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே ஏராளம் யுவதிகளை அவர் இந்த முறையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.