வீட்டுப் பாவனைக்கான 12.5kg சமையல் எரிவாயு சிலிண்டர் நாடு முழுவதும் இருப்பதை உற்பத்தியாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி நேற்று (9) வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், விற்பனையாளர்கள் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது அல்லது நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதனை கொள்வனவு செய்வதை தடுக்கும் செயலில் ஈடுபடுவதையும் தடை செய்து, குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (09) உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில், வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் நிறையில் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டமை மற்றும் அதன் விலையில் குளறுபடிகள் காணப்படுவதாக, பாவனையாளர்கள் விசனம் தெரிவித்திருந்த நிலையில் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.